சென்னை, மதுரை, கரூரில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 18 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாயிக்கு மேல் எடுத்துச்செல்லப்பட்டால், பறிமுதல் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆழப்புலா விரைவு ரயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட 4.50 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.