1, 800 குழந்தைகள் மீண்டும் அவர்களது பெற்றோரிடம் சேர்ப்பு

அமெரிக்காவில்  சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் முடிவிற்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஜூன்  வரை 2,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனி காவல் மையங்களில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, டிரம்பின் இந்த கொள்கைக்கு அவருடைய மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் உட்பட நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக சான்டியாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டானா சாப்ராவ், பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி விதித்த காலக்கெடு நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட சுமார்  ஆயிரத்து 820 குழந்தைகளை  அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டதாக  டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version