தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். அப்போது, தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, சில விரும்பத்தகாத சமூக விரோதிகள் பொய் பிரசாரத்தால் தற்போது மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஊக்கத்தொகை போன்ற பல சமூக பணிகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
Discussion about this post