தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை பூர்த்தி செய்யமுடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்தத் தொகுதியான திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இது தொடர்பாக, நகராட்சியின் 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் திருச்செந்தூர் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இது குறித்து நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். ஒரு நாள்,… நம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும் என்றும் புலம்பியுள்ளார்.
Discussion about this post