வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்குப் பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு 3 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் இன்று முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது, மீட்புப் படையினரின் செயல்பாடுகள், தற்காலிக முகாம்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.