ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின் போதும் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்

ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ஸ்டாலின், இம்முறை ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் நேரடி வகுப்பு நடத்தும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காதது பேசு பொருளாகியுள்ளது.

தலைவர்கள், நடிகர்கள் மற்றவர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில், தாங்கள் செய்யும் உடற்பயிற்சி, நற்செயல்கள் குறித்த வீடியோவை வெளியிடுவது வழக்கம். ஆனால், மு.க. ஸ்டாலின் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் எதிர்மறையான பேசு பொருளாகி வருகிறது.

அந்த வகையில், இன்று காலை கிழங்கு கடற்கரை சாலையில் ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற ஒரே காரணத்திற்காக இருமருங்கிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை வழியெங்கும் காவலர்கள் கால்கடுக்க பாதுகாப்பிற்காக நிற்க வைக்கப்பட்டனர்.

கோவளம் அருகே ஒரு கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் டீ பருகினார். அப்போது, போட்டோ ஸ்டெண்டிற்காக ஒரு மாணவரிடம் பேசுவது போல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஆறாம் வகுப்பு படிக்கும் தான் நேரடி வகுப்பிற்கு செல்வதாகவும் ஆன்லைன் வகுப்பு இல்லை என்றும் முதலமைச்சரிடம் மாணவர் கூறியிருக்கிறார். ஆனால், அந்தப் பள்ளி மேல் நடவடிக்கை எடுக்காமல் விளம்பரத்திற்காக மாணவனை அழைத்து பேசும் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன்.

நேரடி வகுப்புகள் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின் தான், ஆன்லைன் வகுப்புக்கு பதிலாக நேரடி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version