தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 24 பேரின் பரிசோதனை முடிவுக்காக சுகாதாரத்துறை காத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ள நிலையில், கடந்த 15ஆம் தேதி நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 41 பேரின் மாதிரிகளில், 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிப்புக்குள்ளான அனைவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இதுதவிர வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள் உட்பட மேலும் 24 பேருக்கு S-ஜீன் டிராப் உறுதியாகியுள்ளதாகவும், அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு பரிசோதனையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version