முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல பாச உணர்வோடு பழகி வருகிறார்கள் என்றும் இதில் தினகரன் சூழ்ச்சியை கையாண்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இணைக்கமுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். ஆனால், பிரித்தாளும் சூழ்ச்சியினை தினகரன் கையாள்வதாகவும், தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிப்பதாகவும் பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
அதிமுகவின் பலம் திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு தெரிய வரும் எனவும் அவர் கூறினார். தினகரன் ஏற்படுத்திய குழப்பத்திற்கு இந்த வெற்றி பதிலாக அமையும் எனவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியம் அமைப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். 4 ஆம் கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் அகல்வராய்ச்சி பணிகளில் 45 சதவீதம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.