சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்…
- சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைத்தல் கழகம் உருவாக்கப்படும்.
- கிராம மக்கள் தங்களது வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் வளர்க்கும் வகையில் முதலமைச்சர் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.
- எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மவுண்ட் – பூந்தமல்லி- ஆவடி நெடுஞ்சாலைக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டப்படும்.
- ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாக விளங்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும்.
- ராயபுரம் தொழிற்கல்வி மகளிர் விடுதி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் 3 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 விடுதிகள் கட்டப்படும்.
- சென்னை பள்ளிகரணை பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட புறநகர் மருத்துவமனை ஒன்று சுமார் 31 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
- சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சர்தார் படேல் சாலையில், மத்திய கைலாஸ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 12 அறுவை அரங்குகள் மற்றும் 260 படுக்கை வசதிகள் கொண்ட அடித்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு , மகப்பேறு பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ரத்தம் சுத்திகரிப்பு பிரிவு, பொது மருத்துவம், உடனடி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் கூடிய ஒரு அலகு 141 கோடியே, 42 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
- கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், ஊடு கதிர் அலகு, செயற்கை சுவாசக் கருவிகள், அல்ட்ரா சவுண்ட் கருவி போன்ற மருத்துவ கருவிகள், 134 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
மேலும் சில முக்கிய அறிப்புகளை படிக்க… https://tinyurl.com/yb69negs