கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

மூச்சுக்கு முன்னூறு தடவை, அதிமுக அடிமை என கூறி வரும் திமுக, தனது அடிமை தனத்தால், காவிரி உரிமைகளை பாதுகாப்பதில் இன்று கோட்டை விட்டு நிற்கிறது. உண்மையில் யார் அடிமை என்பதை தோலுரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…

வாயத் திறந்தாலே அடிமைகள் அடிமைகள் என்று அதிமுகவை விமர்சித்துக்கொண்டிருந்த வாய்கள் எல்லாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று தேடிப்பார்த்தால், கடல்லயே இல்லையாம் என்ற கணக்காக காணாமல் போய்விட்டன… நீட் தேர்வா? அதிமுக அடிமை… காவிரி நீரா, அதிமுக அடிமை… அதுவா, இதுவா, எதுவா இருந்தாலும் திமுகவின் வாயில் வந்ததெல்லாம் அதுதான்.. ஆனால், இன்று உண்மையான அடிமை யார்? என்று கடைக்கோடியில் இருக்கும் பாமர மக்களே உணர்ந்துவிட்டார்கள்… ஆம், அடிமைகளின் கூடாரம் திமுக.. ஐயையோ நாங்க சுயமரியாதைச் சுரங்கம் என்று காலரை தூக்கிவிட்டுத் திரியும் திமுகவினரிடம் அந்த நீட் என்னாச்சுங்க என்று கேட்டுப்பாருங்களேன்.. அப்படியே நீட்டாக ஒதுங்கி விடுவார்கள்.. பாஜக உத்தரவு கொடுக்கல, நீட் விலக்கு கிடைக்கல என்பார்கள்.. அந்த கரண்ட் பில்ல ஏன் ஏத்துனீங்க என்றால், ஷாக் அடித்ததுபோல ரியாக்ஷன் கொடுத்துவிட்டு, பாஜக ஏத்தச்சொன்னாங்க ஏத்துனோம் என்பார்கள்… 1998ல் பாஜகவுடன் கூட்டணி போட்டு ஆட்சியில் அமைச்சர் பதவி அனுபவித்துவிட்டு தீண்டத்தகாத கட்சியா என்றெல்லாம் கருணாநிதி காலத்திலேயே வசனம்பேசி அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவர்கள் திமுகவினர்..

அப்படியே, இந்தப்பக்கம், “காவிரில ஏன் தண்ணி வரல?” என்றால் “காங்கிரஸ் தரமாட்டீங்கராங்க அதான் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்” என்பார்கள் கூச்ச நாச்சமே இல்லாமல்… அட உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்தானே கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிறார்கள்,, பிறகென்ன தண்ணீரை கேட்டு வாங்கலாமே என்றால் அது… அது… அது… வந்து… போயி… என்று கைகை பிசைந்து கொண்டு நிற்பார்கள்…

அட INDIA கூட்டணியின் முதல் கூட்டம் பீகாரில் நடந்தபோதே, டெல்லி சேவைகள் மசோதாவை காங்கிரஸ் எதிர்த்தால்தான் கூட்டணியில் தொடருவோம் என்பதில் உறுதியாக இருந்தது ஆம் ஆத்மி.. ஜூலை மாதம் பெங்களூருவில் நடந்த அக்கூட்டணியின் கூட்டத்திற்கு முன்னதாகவே இதை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ்.. ஆனால், அதே பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் சென்றார்.., அவரை வரவேற்றது கர்நாடகாவின் துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான T.K.சிவக்குமார் தான்.. காவிரி நீர் குறித்து கட்சியிடமும் கேட்கவில்லை, அமைச்சரிடமும் கேட்கவில்லை,, கூட்டணியின் கூட்டத்திலும் கேட்கவில்லை.. கப் சுப் என்று இருந்துவிட்டு கமுக்கமாக ஊர் திரும்பினார் ஸ்டாலின்…

ஏன் கேட்கவில்லை? பயம்தான்.. வேறென்ன? எங்கே கேள்விகேட்டால் கூட்டணியில் இருந்து திமுகவை விரட்டியடித்துவிடுவார்களோ என்ற பயம்தான்.. இப்போது சொல்லுங்கள் உண்மையான அடிமைக்கட்சி திமுக தானே?

எப்போது பார்த்தாலும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, எமர்ஜென்ஸியின்போது மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார். அப்போது யாருடைய ஆட்சி? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அந்த ஆட்சியில்தான் எமர்ஜென்ஸி கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் மிசாவும் கொண்டு வரப்பட்டது. அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு, முதல்வர் ஸ்டாலினும் அவரது குடும்பமும் காங்கிரஸுக்கு அடிமையாகத்தானே இருந்து கொண்டிருக்கிறார்கள்…

ஆக, உண்மையான அடிமைக்கட்சி திமுகதான் என்பதையும், உண்மையான அடிமைகள் திமுகவினர்தான் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்தவுடன்,, “ஐயையோ… சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே” என்ற வடிவேலு காமெடி கணக்காக பதறிக்கொண்டிருக்கிறது திமுக..

இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்… பொறுங்கள் *இன்னும் சில நாட்களில் எந்தெந்த கட்சிகளின் காலடியில் பாத பூஜை செய்யப்போகிறது திமுக* என்பதைப் பார்க்கும் எண்டர்டெய்ன்மென்ட் எல்லாம் காத்திருக்கிறது நமக்காக..

–  மனோஜ்குமார் கோபாலன், இணையாசிரியர்

Exit mobile version