திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணையில், 9 மதகுகள் கடந்த மாதம் 22 -ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனையடுத்து தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மேலணையில் உடைந்த மதகுகளை சரி செய்யும் பணி இன்றுடன் நிறைவுபெறும் என்று அவர் தெரிவித்தார். வாய்க்கால்களில் தேவையான தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்திற்கு தடையின்றி நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதாக விஜயபாஸ்கர் கூறினார்.
முடிவுக்கு வந்தது முக்கொம்பு மதகுகள் பணி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: எம்.ஆர்.விஜயபாஸ்கர்திருச்சி கொள்ளிடம்முக்கொம்பு அணை
Related Content
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறப்பு
By
Web Team
July 24, 2019
முக்கொம்பில் ரூ.387.60 கோடி செலவில் புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கியது
By
Web Team
July 3, 2019
வரும் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெரும்
By
Web Team
February 5, 2019
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக : போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
February 1, 2019
கரூரில் 3,268 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
By
Web Team
February 1, 2019