திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறப்பு

திருச்சி முக்கொம்பு அணைக்கு 1,000 கன அடி தண்ணீர் வரத்து வரும் நிலையில் குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக அணையில் இருந்து மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீரானது திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரானது கரூர் மாயனூர் அணையை அடைந்து இன்று திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தடைந்தது.

முக்கொம்பு அணையில் தண்ணீர் வரத்து 1000 கன அடியாக உள்ளது. முக்கொம்பு அணையில் இருந்து குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சி காவிரி ஆற்று படுகையில் கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முத்தரசநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர், ராட்சத கிணறுகள் பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கிருந்து திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறும் சூழல் ஏற்பட்டு உள்ளது. 

Exit mobile version