முக்கொம்பு அணையில் 9-வது மதகு உடைந்தது

1836- ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் திருச்சியை அடுத்த முக்கொம்பில் மேலணை கட்டப்பட்டது. இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. இந்த அணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. காவிரியில் அதிகளவில் நீர் வரத்தால், முக்கொம்பு மேலணை நிரம்பி வழிகிறது. இதனால், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வரை கொள்ளிடத்திலிருந்து நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அணையில் 8 மதகுகள் நேற்றிரவு உடைந்தன. இந்தநிலையில், இன்று காலை 9-வதாக மற்றொரு மதகும் நீரில் விழுந்தது. இதனால், விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது. நீரின் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, மதகுகள் உடைந்திருப்பதாக கூறப்படுகிறது. காவிரி ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேறி வருவதால், மக்கள் யாரும் மேலணை பகுதிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version