முக்கொம்பு அணை குறுக்கே கதவணைகள் கட்டும் பணிகள்

கொள்ளிடம் முக்கொம்பு அணைகளின் குறுக்கே கட்டப்படும் கதவணைகளை கண்காணிக்கும் பணியில் , புதிய வட்டங்களை ஏற்படுத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் சேதமடைந்த கதவணைக்கு பதிலாக 387 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய அணையும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர், நாகை மாவட்டங்களில் ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே தலை மதகுகளுடன் 420 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கதவணைகள் கட்டும் பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறன. பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க பொறியாளர்கள் அடங்கிய குழுக்களுடன் புதிய கோட்டங்கள் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சி சிறப்பு திட்ட வட்டத்திற்கு கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவும், திருச்சி திட்ட கோட்டத்திற்கு செயற்பொறியாளர் தலைமையில் 68 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெண்ணையாறு கோட்டத்தில் செயற்பொறியாளர் தலைமையில் 65 பேர் கொண்ட குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகளை இந்த குழுக்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேலூர், வரட்டாறு அணை, கும்பக்கோணம், மேல் பாலாறு ஆகிய பகுதிகளில் இருக்கும் செயல்படாத கோட்டங்கள் மூடப்பட்டுள்ளன.

Exit mobile version