முக்கொம்பில் ரூ.387.60 கோடி செலவில் புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கியது

காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் 387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அணை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி முக்கொம்பில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மேலனையின் சில கதவணைகள், அதிகப்படியான நீர்வரத்தால், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி உடைந்தன. இதைத்தொடர்ந்து உடைந்த கதவணைக்கு அருகிலேயே புதிய அணை கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கதவணை சேதமான பகுதியில் 38 கோடியே 85 லட்சம் செலவில், அணையை தற்காலிகமாக பலப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதனிடையே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 55 கதவணைகளுடன் 650 மீட்டர் நீளம் மற்றும் வட புறம் கூடுதலாக 150 மீட்டர் நீளத்துடன் இந்த அணை கட்டப்பட உள்ளது.

Exit mobile version