மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை மண்டல அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மீன்வளத்துறை மண்டல அலுவலகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வரும் 7ஆம் தேதி தீவிரமான கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 10ஆம் தேதி வரை தெற்கு கேரளா கடற்பகுதி, லட்சத்தீவு பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைக்கும்படியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை முறையாக அனைவரும் பின்பற்றுமாறும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
Discussion about this post