"பொதுமக்கள் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும்"

நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட பொதுமக்கள் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி அறிவுறுத்தலின்படி, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணி பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசின் 88 அங்காடிகள் மூலம் கதர் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Exit mobile version