"பேட்ட" புதிய தோற்றத்தில் ரஜினி! 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.  படத்திற்கு  “பேட்ட” என தலைப்பிடப்பட்டுள்ளது.  கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடைசியாக வெளியான ரஜினியின் காலா வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி தொடர்ந்து  2 படங்களில் நடித்தார்.

இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே நடித்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக்கில் ரஜினி வித்தியாசமாக தோற்றமளிக்கிறார். தேவாலயம் ஒன்றின் கதவை திறந்து ரஜினி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 10 நிமிடங்களில் மட்டும் இந்த வீடியோவை யூ டியூப்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.   

Exit mobile version