பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து இம்ரான் கான் கடந்த 18 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியதாகபாகிஸ்தான் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது வாழ்த்து கடிதத்தில் பேச்சுவார்த்தை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது.