நவாஸ் ஷெரிப் அடைக்கப்பட்ட சிறை இதுதான்!

பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 1990-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது, லண்டனில் முறைகேடாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, லண்டனில் இருந்த அவர்கள் இருவரும் பாகிஸ்தான் திரும்பினர். நவாஸ் மற்றும் மரியம் ஆகியோரை லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அடியாலா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். நவாஸ் ஷரீப்  கைதையடுத்து, அவரது கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். பதற்றமான சூழல் நிலவுவதால், முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version