தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி, 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு உள்ளிட்ட காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தற்போது 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 82 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு, 6 லட்சத்து 7 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவற்றை செய்ய வரும் 9, 23ஆம் தேதிகளிலும், அக்டோபர் 7 மற்றும் 14ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: தலைமை தேர்தல் அதிகாரிவரைவு வாக்காளர் பட்டியல்
Related Content
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!
By
Web Team
November 19, 2020
உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு
By
Web Team
March 2, 2020
நவம்பர் 25-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி
By
Web Team
October 13, 2019
இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
By
Web Team
September 24, 2019
தேர்தல் பணிகளில் மூன்றரை லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்: சத்யபிரதா சாஹூ
By
Web Team
April 18, 2019