உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வருகிற 20ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுடன் 9 மாவட்ட தேர்தல்களையும் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. புதிய வாக்குச்சாவடி மையங்களுக்கான வரைவு பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை நடத்தினார். இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலை, மார்ச் 6ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கும் நிலையில், நாளைக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version