ட்ரம்பை கலாய்த்த உலக தலைவர்கள்- ஐக்கிய நாடுகள் சபையில் சிரிப்பலை  

 

அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் , ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொதுச் சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு உலகத் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொண்டார்.

ட்ரம்ப் தன்னுடைய பேச்சில், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மற்ற அதிபர்களின் பதவிக்காலத்தை விட அமெரிக்கா அதிக அளவில் வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த சில உலகத் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சிரித்து விட்டனர்.

இதைச் சற்றும் எதிர்பாராத ட்ரம்ப் , ‘நான் இந்த எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை’ என்று கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து சிரித்து சமாளித்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஐ.நா சபை உரையின் பொழுது தலைவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை; என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள்’ என்று சமாளித்து விட்டார்.

Exit mobile version