பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என இதுவரை 23 ஆயிரத்து 882 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post