முடிவுக்கு வந்தது முக்கொம்பு மதகுகள் பணி

திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணையில், 9 மதகுகள் கடந்த மாதம் 22 -ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனையடுத்து தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மேலணையில் உடைந்த மதகுகளை சரி செய்யும் பணி இன்றுடன் நிறைவுபெறும் என்று அவர் தெரிவித்தார். வாய்க்கால்களில் தேவையான தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்திற்கு தடையின்றி நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதாக விஜயபாஸ்கர் கூறினார்.

Exit mobile version