கிரிக்கெட் நலனிற்காகவே பதவியை ராஜினாமா செய்துள்ளேன் – சேவாக்

 இந்திய முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான சேவாக், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்  ஆவார். டெல்லி கிரிக்கெட்டிற்கு ஆலோசனை வழங்கி வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதற்காகவே இந்த கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டியானது மனோஜ் பிரபாகரை பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரைத்தது.

ஆனால் டெல்லி கமிட்டியோ அதனை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல்  ஆகிய மூவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

டெல்லி கிரிக்கெட்டின் எதிர்கால நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவுக்கு வந்ததாக சேவாக் தெரிவித்துள்ளார்.

“டெல்லி கிரிக்கெட் வளர்ச்சி பெற ஆலோசனைகளை வழங்குவதே கிரிக்கெட் கமிட்டியில் உள்ள எங்களுடைய வேலை.

ஆனால், நாளுக்கு நாள் எங்களுடைய வேலைகள் அதிகரித்துக்கொண்டே வருவதால், இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளோம்” இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version