அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோன்ஸ் திருமணம்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலர் நிக் ஜோன்சுக்கும் ஜோத்பூரில் உள்ள பிரபல அரண்மணையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும், இணைய தொடரிலும் நடித்து வந்த போது, தன்னை விட பத்து வயது குறைந்தவரான அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸுடன் காதல் வயப்பட்டார்.

பிரியங்கா, நிக் ஜோன்ஸ் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்தி வெளியான நிலையில், கடந்த வாரம் இந்தியா வந்த நிக், பிரியங்காவுடன் ஜோத்பூரில் உள்ள அரண்மனையை பார்வையிட்டார்.

இதன் மூலம் பிரியங்கா – ஜோன்ஸ் திருமணம் ஜோத்பூரில் நடைபெற உள்ளது உறுதியானது.

Exit mobile version