பிரியங்கா சோப்ரா நடித்துள்ள “தி ஒயிட் டைகர்" – முதல் பார்வை வெளியீடு!

நெட்ஃபிலிக்ஸுக்காக பிரியங்கா சோப்ரா நடித்துள்ள தி ஒயிட் டைகர் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

ஆங்கிலப் படங்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடைசியாக “தி ஸ்கை இஸ் பிங்க்” திரைப்படம் வெளியானது.

இப்போது ”மேட்ரிக்ஸ் 4” ஹாலிவுட் படத்தில் நடித்துவரும் அவர், வி கேன் பி ஹீரோஸ் மற்றும் தி ஒயிட் டைகர் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். 99 ஹோம்ஸ் திரைப்படத்தை இயக்கிய ரமின் பஹ்ரனி இயக்கியுள்ள இப்படம், அரவிந்த் அதிகா எழுதி 2008 ஆம் ஆண்டு புக்கர் விருது வாங்கிய “தி ஒயிட் டைகர்” நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version