கணவருடன் உச்சக்கட்ட Glamour -ல் பிரியங்கா சோப்ரா..வைரல் புகைப்படம்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது.இவர் அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.தற்போது இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிராமி விருது விழாவில் தனது கணவரின் குடும்பத்துடன் கலந்துகொண்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.அவருடைய கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் சகோதரர்கள், மேடையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இரு பாடல்களைப் பாடினார்கள். அதில் பிரியங்கா அணிந்திருந்த உடையானது மிகவும் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருந்தது.இதனை பார்த்த பலரும் விருது வழங்கும் விழாவிற்கு இப்படியா வருவது என விமர்சனம் செய்துள்ளார்கள்.

மேலும் நேற்று கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட் மற்றும அவரின் மகள் எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர்.இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக ப்ரியங்கா  கோப் பிரையண்டின் எண்ணான 24- என்பதை தனது நகத்தில் வரைந்துள்ளார்.

அந்த விழாவில் நிக் ஜோனஸ்-ப்ரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Exit mobile version