பெண்களை ஏமாற்ற தினுசு தினுசாக யோசனை!!

போலி சாதிச்சான்றிதழ் தயாரித்து, இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.

பெண்களை ஏமாற்ற தினமும் புதிய புதிய யுக்தியை கையாள்கிறார்கள்.. அவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளும் விதத்தில் இருக்கிறது இந்த மதுரை சம்பவம் ..

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார் .

இந்த நிலை அதே நிறுவனத்தில் பணியாற்றிய கார்த்திக் என்பவர் இவரை காதலிப்பதாக கூறி, பின்னாலேயே சுற்றி வந்துள்ளார்… அப்பெண் மசியாததால், தாமும் உங்கள் சாதி தான் என கூறியுள்ளார்.. போலியா சாதிச்சான்றிழும் தயாரித்து அப்பெண்ணிடம் காட்டியுள்ளார்.. புவனேஸ்வரியின் பெற்றோரிடமும் காட்டி சம்மதம் பெற்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணத்திற்கு சீதனமாக கொண்டு வந்த 30 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு , அவரது உண்மை முகத்தை காட்டத்துவங்கியுள்ளார் கார்த்திக்.. தினமும் புவனேஸ்வரியை அடித்து சித்திரவதை செய்ததோடு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவமதித்து வந்துள்ளார்.

இதையடுத்து புவனேஸ்வரி மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் கார்த்திக், சகோதரர் சதீஷ் குமார், தாயார் உமா மகேஸ்வரி ஆகிய 3 பேர் மீதும் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Exit mobile version