உளவுத்துறை எச்சரிக்கை – முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

அடிப்படைவாத அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழக முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைவாத அமைப்பு மற்றும் சமூக விரோத அமைப்புகள் மூலம் தமிழகத்தில் உள்ள மிக முக்கியப் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு, உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்பு, எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு மற்றும் சென்னை காவல்துறை ஆகியவற்றின் மூலம் முதலமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் கான்வாய்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் செல்லும் இடத்திற்கெல்லாம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Exit mobile version