தூக்கில் தொங்கிய இளைஞர் – 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை அருகே விசாரணை அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அணைக்கரைப்பட்டி – வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த இதயக்கனி என்பவர், தான் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக இதயக்கனியின் சகோதரர் ரமேஷை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், திடீரென ரமேஷ் தூக்கிட்டு மாய்த்துக் கொண்டார்.

ரமேசின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், ரமேஷை விசாரணைக்கு அழைத்துச் சென்ற 4 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை நகலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காண்பித்தார். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Exit mobile version