செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி… தவறுதலா? தனிநபர் வன்மமா?

நான்காவது மாடியில் செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது விபத்தா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் திருப்பியுள்ளனர். 

சென்னை எஸ்பிளனேடு,எம் கே காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது சல்மான் இவருக்கு அஜிரா என்கிற பெண்ணுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இந்த நிலையில் அஜிரா 4-வது மாடியில் நின்றுகொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துள்ளார், இதையடுத்து அஜிராவை முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் திருமணமாகி நான்கு மாதமே ஆன நிலையில் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது இளம் பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version