செல்போன் வாங்குவது போல் நடித்து திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்களை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள, செல்போன் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விலை உயர்ந்த செல்போன்களை காட்டும்படி கூறியுள்ளார். அப்போது, பெண் ஊழியர் புதிய செல்போன்களை காண்பித்துள்ளார். 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரு செல்போன்களை பெற்றுக்கொண்ட அந்த இளைஞர், வேறு செல்போன்களை காட்டும்படி கூறியுள்ளார். அப்போது ஊழியர் திரும்பிய நிலையில், இருசெல்போன்களையும் எடுத்துக்கொண்டு இளைஞர் தப்பியோடியுள்ளார்.

Exit mobile version