16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை…!

கள்ளக்குறிச்சியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான இளைஞர் சேலம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சதீஷ் என்பவருக்கும், சின்னசேலத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் சிறுமியையும், சதீஷையும் பிரித்து வைத்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சதீஷ் தனது திருமண அழைப்பிதழை சிறுமிக்கு அனுப்பினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி சதீஷை பேச வருமாறு அழைத்துள்ளார். இருவரும் நேரில் சந்தித்து பேசியபோது வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். காயமடைந்த சிறுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த நிலையல், சதீஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சதீஷை தேடி வந்த நிலையில், சேலம் உடையாப்பட்டி அருகேயுள்ள புதர் காட்டில், அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தற்கொலைக்கு முன் அவர் எழுதி சட்டைப் பையில் வைத்திருந்த கடிதத்தில், மன விரக்தியில் சிறுமியை கத்தியால் குத்தியதாகவும், போலீஸ் தேடுவதை அறிந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். சதீஷின் இருசக்கர வாகனத்தில் இருந்து செல்போன், கயிறு, சிறிய பெஞ்ச் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Exit mobile version