தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பெரியார் நகரில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைராஜன், ஜோதி ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். சோலைராஜனின் சொந்தவூரான குளத்தூரில் இருவரும் வசித்து வந்தனர். இந்தநிலையில், காலையில் வீட்டின் வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுதொடர்பாக குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version