“தம்மை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்” – அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் கழகத்தினர் முன்னிலையில் பேசிய தென்னரசு, புரட்சி தலைவர் பாணியில் திண்டுக்கல் தேர்தலை போல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஈரோடு பல்நோக்கு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், நேதாஜி தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் புரட்சி தலைவி மற்றும் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட தென்னரசு, ஈரோடு கிழக்கு தொகுதிக்காக விடியா திமுக அரசு எந்த மக்கள் நலத்திட்டங்களையும் இதுவரை கொண்டுவரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்த தம்மை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். தம்முடைய வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும், உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டு பிள்ளையாக உழைப்பேன் என்றும் அவர் சூளுரைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தமக்கு வாய்ப்பு அளித்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, வேட்பாளர் தென்னரசு நன்றி தெரிவித்தார்.

Exit mobile version