‘தல’ தோனியின் பேட்டுடன் யோகிபாபு!

இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் தோனியின் இடம் சிறந்த ஒன்று. கேப்டன் கூலாக வலம் வந்து எதிரணியினரை ஃபூலாக ஆக்கியவர். இந்தியாவிற்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும், 4 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று கொடுத்த ஜாம்பவான். தோனி ஸ்பார்டன்ஸ் பிராண்ட் ஒட்டப்பட்ட பேட்டினையே கடைசியாக ஆடும்போது அதிகம் பயன்படுத்தி வந்தார். தற்போது இந்த பேட்டினை நடிகர் யோகி பாபுவிற்கு பரிசளித்து அந்த பேட்டில் தனது கையொப்பத்தையும் இட்டுள்ளார். பெஸ்ட் விஷ்சஸ் யோகிபாபு என்று எழுதி கையொப்பம் இட்டிருக்கும் அந்தபேட்டினை நடிகர் யோகிபாபு அவர்கள் தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Exit mobile version