கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான கே.எல்.ராகுல் சமீபத்தில் திரைப்பட நடிகையான அதியா ஷெட்டியைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும் ராகுலின் திருமணத்திற்காக பிரபலங்கள் பலர் விலையுயர்ந்தப் பரிசுப் பொருட்களை அவருக்கு வழங்கினர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி kawasaki ninja bike ஒன்றை ருபாய் 80 லட்சத்திற்கு வாங்கி பரிசளித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பிரபலங்களான நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரூபாய் 30 லட்சம் மதிப்புமிக்க chopard வாட்ச் ஒன்றினைப் பரிசாக அளித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜூன் கபூர் ஒன்றைக் கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றினைப் பரிசாக அளித்துள்ளார். சல்மான் கான் ஒரு கோடியே 64 லட்சம் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றினைப் பரிசாக அளித்துள்ளார். முக்கியமாக இந்திய அணியின் முக்கிய வீரரான விராட்கோலி இரண்டு கோடியே 17 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரினைத் திருமணப் பரிசாக அளித்துள்ளார். இதைத் தவிர, நடிகரும் ராகுலின் மாமனாருமான சுனில் ஷெட்டி ஐம்பது கோடி மதிப்புள்ள வீடு ஒன்றினைப் பரிசாக அளித்துள்ளார்.

 

Exit mobile version