உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று மோதல்

உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி அரையிறுதியை விட்டு வெளியேறியதாக கருதப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று, அடுத்து வரும் 2 போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து தோற்றாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஒருவேளை இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் அரையிறுதி கனவு கிட்டத்தட்ட முற்று பெற்றுவிடும்.

இதேபோல் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்திற்கு முன்னேறும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்து அதே இடத்தில் நீடிக்கும்.

உலகக்கோப்பைத் தொடரில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 10 போட்டிகளில் 7-ல் ஆஸ்திரேலியாவும் 3-ல் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.

Exit mobile version