உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் உலக கோப்பை போட்டியின் ஒற்றை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்தார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்துக்கு இடையேயான உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியின் ஒற்றை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். இந்த தொடரில் மொத்தம் ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் மெக்ராக் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்து வந்தது.

Exit mobile version