இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டி: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடும் முதல் போட்டியானது இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக கோலி தலைமையில் உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியுடன் மோதும் தென் ஆப்பிரிக்கா அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதற்கு முன்பு ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது. அதே சமயம் முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, வெற்றியுடன் உலக கோப்பையை தொடங்க உற்சாகத்துடன் உள்ளதால், ரசிகர்களுக்கு இந்த போட்டி விறுவிறுப்பான போட்டியாகவே அமையும். சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Exit mobile version