சர்வதேச அளவில் 7-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக திகழும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. ஜி.டி.பி அடிப்படையில் வெளியிடப்படும் இந்த பட்டியலில் 20.5 ட்ரில்லியன் டாலர் ஜி.டி.பி. உடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 2017-ம் ஆண்டு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, 2018 ஆம் ஆண்டில் 7-வது இடத்தில் உள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியா பின் தங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் ஜி.டி.பி. 2.7 ட்ரில்லியன் டாலராக உள்ளது.