மதுவிற்காக கட்டிட தொழிலாளி பாட்டிலால் குத்தி கொலை

திருச்செந்தூர் அருகே அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், கட்டிட தொழிலாளி பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டணம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த லட்சுமனன் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம்- ஆறுமுகநேரி சாலையில் உள்ள அரசு மதுபானகடையில் மதுபானம் வாங்க சென்றுள்ளார்.

பொங்கல் பண்டிகை என்பதால் கடை திறக்கும் முன்பே கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் வரிசையில் நின்றுள்ளார் லெட்சுமனன். அப்போது காயல்பட்டணம் பாஸ்கர் என்பவர் வரிசையில் நிற்காமல் முந்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் லட்சுமனனுக்கும், பாஸ்கரனும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாஸ்கர் பீர் பாட்டிலை உடைத்து லட்சுமனன் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் லட்சுமனன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version