தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், 3 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எல்லாபதார் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த ஷேக் பாபு, ஷபுதீன், ஷயீக் மக்தூம் ஆகியோர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம், குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.