நீட் நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் திருப்பதியில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக மாணவர் உதித்சூர்யா மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காக ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. உதித் சூர்யாவும் அவரது பெற்றோரும் தலைமறைவான நிலையில், மூன்று பேரும் திருப்பதியில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை சென்னை அழைத்து வந்த தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து மூன்று பேரும் தேனி அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதையடுத்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.