நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது

மருத்துவம், பல் மருத்துவம் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 14,37,000 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில். பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாலும், கொரோனா கட்டுப்பாடுகளாலும் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனையடுத்து அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக, அக்டோபர் 14ஆம் தேதி தேர்வு நடந்தது.

முன்னதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

Exit mobile version