சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மூணாறில் குளிர்கால மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த மாதங்களில் பெய்த கனமழையால் சுற்றுலா தலமான மூணாறு பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் கேரள சுற்றுலாத்துறை குளிர்கால மலர்க் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி வரை நடக்கும் இந்த மலர் கண்காட்சியில் கிரிஸ்தமம், டோரோனியம் போன்ற தாய்லாந்து நாட்டு மலர்கள் உள்ளிட்ட 200 வகையான மலர்கள் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றன.
மேலும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இந்த மலர்கண்காட்சியில் இடம்பெற உள்ளன.