நீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது சீசன் தொடங்குவதால் உதகை – குன்னூர் மலை ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

உதகையில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜினும், குன்னூர் முதல் உதகை வரை பயோ டீசல் என்ஜினும் இயக்கப்படுகிறது. இதனால் வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகளிடையே மலை ரயில்கள் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உதகை – குன்னூர் வரை இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளால் மலை ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. 

Exit mobile version