நீலகிரி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி!

நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த புது மணத்தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே ஒசஹட்டி கிராமத்தைச் சேர்ந்த தயானந்தன்-வினோதினி தம்பதியினர், சோலூர் பகுதியிலுள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால், அருகில் குடியிருந்தவர்கள், கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, இருவரும் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version